மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 60ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது..!!

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வர்த்தகம் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது புதிய சாதனையை படைத்துள்ளது.

சா்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான நிலவரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே பரவலாக வரவேற்பு அதிகரித்தது காணப்பட்டது போன்றவை இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சி பெறுவதற்கு முக்கியமான காரணங்களாகவும், ரூபாய் மதிப்பில் காணப்பட்ட வலுவான எழுச்சியும் சந்தை விறுவிறுப்புக்கு கூடுதல் வலு சோத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் தொடங்கிய வர்த்தகம் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது புதிய சாதனையை படைத்துள்ளது.

இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டியும் புதிய உச்சம்: 

தேசிய பங்குச்சந்தை குறியிட்டெண் நிஃப்டியும் 106 புள்ளிகள் அதிகரித்து 17,929 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவில் வட்டிக்குறைப்பு குறித்த ஃபெடரல் வங்கி அறிவிப்பால் பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே