கனவு விலையில் மோட்டோ G 5G பிளஸ் அறிமுகம்; சீன போன்களை மிரட்டும் மோட்டோரோலா!

மோட்டோரோலா நிறுவனமானது மிகவும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் (Moto G 5G Plus) மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 765 SoC ப்ராசஸர் உடன் வருகிறது. மற்றும் புதிய மோட்டோ ஜி 5 ஜி பிளஸ் ஆனது ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 20W டர்போபவர் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
மிகவும் சுவாரசியமாக முன்பக்கத்தில் டூயல் செல்பீ ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மேலும் இதன் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமர்ந்திருக்கிறது.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்குகிறது மற்றும் டூயல் சிம் ஸ்லாட்டை (நானோ + நானோ) கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் அளவிலான முழு எச்டி + (1080×2520 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவை 21: 9 என்கிற திரை விகிதம், 409 பிபி பிக்சல் அடர்த்தி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் கொண்டுள்ளது.

குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765 ஆக்டா கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (1TB வரை) பயன்படுத்தி இதன் உள்ளடக்க சேமிப்பை மேலும் விரிவாக்கலாம்.
மோட்டோ ஜி 5ஜி பிளஸின் பின்புறத்தில் ஒரு சதுர வடிவிலான குவாட் கேமரா அமைப்பு உள்ளது. அதில் எஃப் / 1.7 லென்ஸ் கொண்ட 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 118 டிகிரி வியூ மற்றும் எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள்.
உள்ளன

முன்பக்கத்தில், மோட்டோ ஜி 5ஜி பிளஸ் டூயல் ஹோல் பஞ்ச் கட் அவுட்டுக்குள் டூயல் செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட மெயின் 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன் ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது குறிப்பிடததக்கது.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியை 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது இரண்டு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும்.
இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் – யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 5 ஜி எஸ்.ஏ / என்எஸ்ஏ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 5.1, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, என்எப்சி போன்றவைகளை கொண்டுள்ளது.
மோட்டோ ஜி 5 ஜி பிளஸ் சுமார் 207 கிராம் எடையும் 168x74x9 மிமீ அளவையும் கொண்டது. போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை accelerometer, gyroscope, proximity, ambient light, sensor hub மற்றும் e-compass ஆகியவைகளை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்:

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.29,400 க்கு அறிமுகமாகி உள்ளது மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தோராயமாக ரூ.33,700 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
இது சிங்கிள் சர்ஃபிங் ப்ளூ கலர் விருப்பத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் ஐரோப்பாவில் வாங்க கிடைக்கும். ஆனால் தற்போது வரையிலாக இதன் இந்திய அறிமுகம் குறித்து மோட்டோரோலா நிறுவனம் எந்த அறிவிப்பையும் நிகழ்த்தவில்லை. அது சார்ந்த தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே