ஆபாசபடங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்களில் திருச்சியை சேர்ந்தவர்கள் அதிகம்!

சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் ஐ.பி. முகவரிகளை வைத்து, 3 வெவ்வேறு குழுக்களை கண்டிபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறார் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில், அவ்வாறான படங்களை பார்ப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு விசாரணையை துவக்கியுள்ளது.

ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில் சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் ஐ.பி. முகவரியின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே