நோட்டாவுக்கு அதிக வாக்குகள் – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

ஒரு தொகுதியில் நோட்டாவை விட மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெறும்போது, அங்கு மறு தேர்தல் நடத்தக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அங்கு மறு தேர்தல் நடத்தவும், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே