பேஸ்புக், டிவிட்டர் விட்டு வெளியேற மோடி திடீர் முடிவு..

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகளவில் ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த இடத்தில் மோடி உள்ளார்.

ட்விட்டரில் 5 கோடியே 33 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 4 கோடியே 40 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 3 கோடியே 52 லட்சம் பேரும், யூ டியூபில் 45 லட்சம் பேரும் மோடியைப் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தனது ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் கணக்குகளை முடித்துக்கொண்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மோடியின் ட்விட்டர் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்லாயிரக்கணக்கானோர் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கள் ஆதரவாளராகவும், பக்கபலமாகவும், முன்னுதாரணமாகவும் உள்ள பிரதமர் மோடியை தொடர்புகொள்ள சமூக வலைதளங்கள் மட்டுமே வழி என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அண்மைச் சூழல்களால் மன வலிக்கு ஆளாக நேர்ந்திருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற உறுதியோடு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே