டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கோடை காலத்தையொட்டி தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.