மோடி-ஜின்பிங் சந்திப்பு! தமிழக காவல்துறைக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

இந்திய சீன நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கும், இருபெரும் தலைவர்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி இருப்பதாக முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இருபெரும் தலைவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு நல்கிய தமிழக மக்கள் குறிப்பாக மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் தலைவர்களை மகிழ்வித்த கலைஞர்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அமைச்சர்கள், அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே