முதல்வரின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது என்று மாநில பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சாத்தன்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக மாநில அரசை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வரின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது என்று மாநில பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், ”நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது; முதல்வர் எடப்பாடியின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது.
அரசு, விசாரணை அமைப்புகளின் மீது பழி போட்டு மலிவான அரசியலை செய்கிறது திமுக.
போலீசாரின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் ஸ்டாலின்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜிக்கு, வெள்ளியன்று மாலைதான் அந்த பொறுப்பினை மீண்டும் அளித்து முதல்வர் – துணை முதல்வர் இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.