அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே