அமைச்சர் காமராஜூக்கு கொரோனா இல்லை – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!!

அமைச்சர் காமராஜ் கொரோனாவிலிருந்து மீண்டும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு முழுமையாக குறைந்த பாடில்லை. அந்த வகையில் நேற்றைய தினம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவாரூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

இந்த சூழலில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை மியாட் மருத்துவமனை, “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். காமராஜூக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.

சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. சாதாரணமாக ஒரு அறையில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே காமராஜுக்கு போதுமானதாக இருக்கிறது.

வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அமைச்சர் காமராஜூக்கு தேவைப்படவில்லை” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே