அமைச்சர் ஜெயக்குமாரை உதயநிதி ஸ்டாலின் Play Boy என விமர்சனம் செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டவ முத்து என்பவர் FC-ஐ புதுப்பிக்க அண்ணாநகர் வட்டார போக்குரவரத்து அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களாக முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் தவித்துள்ளார்.
அவர் பலமுறை ஆட்டோவின் FC புதுப்பிக்க முயற்சி செய்தும், முடியாமல் திணறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர் முத்து, அவருடைய ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் முத்துவிற்கு, அவரது ஆழ்வேர்பேட்டை இல்லத்தில் வைத்து புதிய ஆட்டோவை வழங்கினார்.
அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரங்கநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்சன் ஆட்சி என்று விமர்சனம் செய்தார்.
மேலும் இ பாஸ் முறையை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினை சாக்லேட் பாய் என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை எனவும், என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ஒரு Play Boy என்றும் பதிலளித்தார்.