மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (CUET-UG) முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகவுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டிற்கான கியூட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடைபெற்றது.

தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவீத மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தேர்வு முசடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகவுள்ளது. கியூட் தேர்வின் உத்தேச வினைக்குறிப்பைத் தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த விடைத் தொகுப்பில் ஏதாவது புகார்கள் இருந்தால் அதனைத் தேர்வர்கள் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே