டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!!

  • டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது.
  • இன்று முதல் டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 28,000 பேர் பாதிக்கப்படும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று டெல்லியில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அங்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்தை மற்றும் வணிக வளாக கடைகள் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் 50% பயணியுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் தற்பொழுது தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே