கேரள மாநில முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரனை பா.ஜ., அறிவித்துள்ளது.

கேரளாவில் வரும் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.

இங்கு முக்கிய புள்ளியாக கருதப்படும் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன்(88) பா.ஜ.,வில் இணைய முடிவு செய்தார்.

டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களில் மூத்த பொறியாளராக பணியாற்றி உள்ளார்.

கொங்கன் ரயில் திட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரசாரம் துவக்கமாக விஜய் யாத்திரா நடந்து வருகிறது. 

கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடக்கும் இந்த யாத்திரையில், ஸ்ரீதரன் தன்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்து கொண்டார்.

அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன்ஸ்ரீதரன் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுரேந்திரன் கூறுகையில், மோடி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மெட்ரோ ஸ்ரீதரனை, முதல்வர் பதவியில் மக்கள் அமர வைப்பார்கள் அவரது திறமையும், அவர் மீதான நம்பிக்கையும் வெல்ல முடியாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே