மே.வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அங்கு வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மே.வங்க மாநில சட்டசபைக்கு வரும் 27 ம் தேதி முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்காக மாநிலத்தில் ஆளும் திரிணமுல் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.

இந்நிலையில், நிருபர்களை சந்தித்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இன்று 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.

அதில், 50 பெண்கள், 42 இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அடக்கும். மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடவில்லை.

நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன். அங்கு வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

எனக்கு ஆதரவளித்த தேஜஸ்வி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், சிவசேனாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே