இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பதும் கொரோனா பரபரப்பையும் மீறி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களிக்கவேண்டும் என்றும் இலங்கை அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜன பெரமுன கட்சி, சஜித் பிரேமதாஸவின் மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சம்பந்தன் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டதால் 4 முனை போட்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் முன்னிலை தகவலின்படி
- ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி – 67.03% வாக்குகளும்,
- சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி கட்சி 16.99% வாக்குகளும்,
- ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 2.34% வாக்குகளும்,
- சம்பந்தனின் தமிழ் அரசு கட்சி 2.28% வாக்குகளும், பெற்றுள்ளன.
மகிந்தாவின் கட்சி கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது