மதுரையில் மருமகளுக்கு 101வகை உணவுகளுடன் மாமியார் விருந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்றுமாவடி பகுதியை சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் தம்பதியனரின் மகன் அபுல்ஹசனுக்கு கடந்த 9ஆம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஊரடங்கு காரணமாக செல்ல முடியாததால் வீட்டிற்கு வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, ஆம்லேட், புரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள், அப்பளம் உள்ளிட்ட 101வகையான உணவுகளை தயாரித்து நீண்ட இலையில் வைத்து வழங்கியுள்ளார்.
ஒவ்வொன்றையும் தனது மருமகளுக்கு தானே ஊட்டிவிட்டுள்ளார் அஹிலா.
கடந்த சில நாட்களுக்கு ஆந்திரமாநிலத்தில் 67வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் வீடியோ ட்ரெண்டாகிய நிலையில் மதுரையில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது.