மதுரை எய்ம்ஸ் – டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என மத்திய குழு ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில், மதுரையில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அடிக்கல் நாட்டியதுடன் வேறு எந்த பணிகளும் இதற்காக நடைபெறவில்லை.

இந்நிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இவ்வாறு பதிலளித்துள்ளது.

டிசம்பரில் இந்தியா -ஜப்பான்-ஜமைக்கா நிறுவனத்தின் இடையேயான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி 45 மாதத்தில் பணி முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே