மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுதுதலை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட 2வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே