உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாடுகள் – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பொது இடங்களில் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரையவும், சுவரொட்டிகள் ஓட்டவும் அரசியல் கட்சியினருக்கு மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி வீட்டு உரிமையாளரின் அனுமதி இருந்தாலும் சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்தின் போது பிரச்சார வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் எனில் காவல்துறையினரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்துவோர் மீது காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே