அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் அமைச்சர்கள் நிலோஃபர் கபில், வளர்மதி ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தோப்பு வெங்கடாசலம், செம்மலை ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி ஏற்கனவே பதவியில் இருந்தவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதே போல் பாஜகவுக்கான 10 தொகுதிகள், பாமகவுக்கான 23 தொகுதிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலும் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடாமல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே