தமிழகத்தில் நேற்று (மே 9) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை..!!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால், கடந்த 2 நாட்களில் மது விற்பனை சூடுபிடித்தது. இந்த நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 98கோடியே 96லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 97கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 87 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

சேலத்தில் 76 கோடி ரூபாய்க்கும், கோவையில் 67 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 855 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே