தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 2 நாளில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை..!!

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களில் 466 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் கடந்த இரண்டு மாதங்களாக திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பார்கள் திறக்கப்படவில்லை.

வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மதுபானம் வாங்கிச் செல்ல விதிமுறைகளும் உள்ளன.

இந்நிலையில் தீபாவளி நேரம் என்பதால் வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் களைகட்டியது. இரண்டு நாட்களில் மட்டும் 466 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (13.11.20) 227 கோடி ரூபாய்க்கும், சனிக்கிழமை (14.11.20) 237 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 104 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னையை விட அதிகமாக சரக்குகள் வாங்கியுள்ளனர் மதுரை குடிமகன்கள்.

சென்னை மண்டலத்தில் 94 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் மதுபானங்கள் வாங்கி கொரோனா காலத்திலும் குடிமக்கள் சாதனை படைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே