கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம் !!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில தலைவர் பதவியிலிருந்த தினேஷ் குண்டு ராவுக்கு பதிலாக டி.கே. சிவக்குமாரை கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லி யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அனில் செளத்ரியை கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்திருப்பதாகவும் அறிவிப்பில் கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே