கூட்டணி தர்மத்திற்காக குட்ட குட்ட குனியமாட்டோம் : பிரேமலதா எச்சரிக்கை

கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான் என்றார்.

பின்னர் பேசிய விஜயகாந்த், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விரைவில் நலம் பெற்று மீண்டு வருவேன் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே