ஷாகித் அப்ரீடிக்குப் பிறகு குருணால் பாண்டியா; ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு பிரசித் கிருஷ்ணா

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் அனைத்து புள்ளி விவரங்கள், சாதனைகள், சுவார்ஸ்யத் தகவல்கள்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் அனைத்து புள்ளி விவரங்கள், சாதனைகள், சுவார்ஸ்யத் தகவல்கள்.

புனேயில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர், அதன் விவரம் இதோ

135 ரன்கள். ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் தொடக்கக் கூட்டணி, தோல்வி அடையும் போட்டியில் முதல் விக்கெட்டுக்கான அதிகபட்ச ரன் கூட்டணியாகும். விரட்டலின் போது இங்கிலாந்து தோல்வி அடைந்த போட்டிகளில் 3வது கூட்டணியாகும், அதாவது எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச கூட்டணியாகும்.

9.41 என்ற விகிதத்தில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ ரன்கள் குவித்தது. அதாவது தோல்வியுறும் விரட்டலில் இரண்டாவது அதிவேக தொடக்க வீரர்களுக்கான ரன் விகிதமாகும் இதற்கு முன்பாக இருவரும் 129 ரன்களை முதல் விக்கெட்டுக்காக 2018-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 10.14 என்ற விகிதத்தில் இவர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். இந்தப் போட்டியிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது குறிப்பிடத்தக்கது.

பிரசித் கிருஷ்ணா அறிமுகப் போட்டியிலேயே சாதனையான பந்து வீச்சாக 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2016-ல் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிராக 7 ஓவர் 31 ரன்கள் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அறிமுகப் போட்டியில் சாதித்த பிறகு பிரசித் கிருஷ்ணா உடைத்துள்ளார். இதற்கு முன்னர் வருண் ஆரோன் 2011-ல் 6.1 ஓவர் 1 மெய்டன் 24 ரன்கள் 3 விக்கெட் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் முன்னதாக சுப்ரடோ பானர்ஜி 1991-ல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

26 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த குருணால் பாண்டியா அறிமுக ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அதிவேக அறிமுக அரைசதம் கண்டதில் 1980-ல் ரோலாண்ட் பட்சர் என்ற இங்கிலாந்து வீரரின் அறிமுக சாதனையை உடைத்தார். 31 பந்துகளில் 58 ரன்கள் என்ற குருணால் பாண்டியாவின் சாதனை பாகிஸ்தான் அதிரடி வீரர் அறிமுக வீரர் ஷாகித் அப்ரீடியின் 40 பந்துகளில் 102 ரன்கள் என்ற சாதனைக்கு அடுத்த அறிமுக சாதனையாக உள்ளது.

9 விக்கெட்டுகள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று வீழ்த்திய விக்கெட்டுகள், இது உள்நாட்டு ஒருநாள் போட்டிகளில் மிக அதிகம்.

12 சதக்கூட்டணி- ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் அமைத்த 12வது சதக்கூட்டணியாகும் இது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே