நாட்டின் தலைமை கணக்கு தணிக்கையாளராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்பு..!!

இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளராக கிரிஷ் சந்திர முர்மு பதவி ஏற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் முர்முவுக்கு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த சந்திர முர்மு நாட்டின் புதிய தணிக்கையாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக முர்மு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். நேற்று ஜம்மி காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவி ஏற்றார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்ததில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு 65 வயதாகி விட்டதால், அவரது பதவி இந்த வாரம் காலியாகிவிடும் என தெரிகிறது.

இதையடுத்து அந்த பதவிக்கு கிரிஷ் சந்திர முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், குடியரசு தலைவர் முன்னிலையில் முர்மு பதவியேற்றுக் கொண்டார்

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே