#BREAKING: இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு..!!

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி மேலும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாயமான 45 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழக தோட்ட தொழிலாளர்கள் என்பதால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 45 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே