கிசான் திட்ட முறைகேட்டில் “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர்.

பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.

இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து வேளாண்துறை அமைச்சர் கூறுகையில், கிசான் திட்ட முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே