கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம், குகன் ஆகிய 2 பேரை ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் குகன், சோமசுந்தரம் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட 2 பேருக்கு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.