சூர்யா தயாரிப்பில் சூப்பர்ஹிட் இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

கார்த்தி நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை சூப்பர் ஹிட் பட இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

மேலும் இந்த படத்தை சூர்யா தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தை சூர்யா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய கொம்பன் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திரைப்படத்தில் ’கொம்பன்’ படத்தில் நடித்த லட்சுமி மேனன், ராஜ்கிரண், தம்பி ராமையா, கோவை சரளா உள்பட ஒரு சிலர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படம் ’கொம்பன் 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே