கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

இன்று எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மேலும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே