உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும், உத்தர பிரதேச மாநில, பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீப காலத்தில் என்னை சந்தித்தவர்கள், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, கவனமாக இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.