ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருபவர் ராமகிருஷ்ணன். இவர் சம்பவத்தன்று நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது இறப்புக்கு காஞ்சிரங்குடி ஊராட்சிமன்ற தலைவர் முனியசாமி தான் காரணம் என்று ராமகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்துள்ளார். மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஊராட்சிமன்ற தலைவரால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.