கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் “கமல்ஹாசன் 232”; கைதி பட இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

கைதி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக கமலஹாசன் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி, தமிழகத்தில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனால் அவருக்கு தமிழ் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்து. 

இதன் மூலம் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தற்போது இயக்கி. படம் வெளியீடுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கமல் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே