கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

கோவையிலேயே முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், மக்களை கவர நாள்தோறும் புது புது யுக்திகளை கையாண்டு வருகிறார்.

காலையிலேயே மக்களோடு மக்களாக காந்தி பூங்கா பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர், அங்குள்ள பிரபல ஹோட்டலுக்குச் சென்று காபி அருந்தி, அங்கிருந்தவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார்.

பின்னர், ரசிகர் ஒருவர், போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை பாடி காண்பிக்க, கமல்ஹாசன் அதனை ரசித்தார்.

சந்தைகள், குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று பொதுமக்களுடன் உரையாடி, குறைகளை கேட்டறிந்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே