கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி இன்று காலை நடைபெற்ற திருப்பலியில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி இன்று காலை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. 

இலங்கையின் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் , சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர்  அருட்தந்தை லூர்துராஜா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் கூட்டுத் திருப்பலி கொடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே