கொரோனா இரண்டாவது அலை பரவுவதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.. சிறுநகரங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் முதல் அமைச்சர்களுடான ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்..!!

சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 420 கோடி வருவாய் மறைப்பு கண்டறியப்பட்டதாக தகவல்.. காலை முதல் 20 இடங்களில் நடந்த சோதனையில் அதிரடி..!!

திமுக தலைவர் ஸ்டாலின் தூங்கும் போது கூட அச்சத்தில் தன்னைப்பற்றியே நினைப்பதாக முதல்வர் பழனிசாமி பேச்சு.. காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தால் தண்ணீருக்கு கர்நாடகாவை நம்பத் தேவையில்லை என்றும் உறுதி..!!

தேர்தல் சோதனை நடவடிக்கைகளில் பணம், நகை பறிமுதலில் தமிழகம் முதலிடம்.. இதுவரை ரூ.127 கோடி ருபாய் மதிப்பிற்கு நகைகள் உள்ளிட்டவை சிக்கியதாக தேர்தல் ஆணையம் தகவல்..!!

ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் முதலமைச்சர் கூறுவது பொய் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேட்டி.. நினைவிடம் அமைப்பதற்கும் ஸ்டாலின் எதிர்ப்பு கூறவில்லை என்றும் விளக்கம்..!!

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கு எதிராக திமுக தொடுத்த வழக்கு.. தகுதியானதாக இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே