தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் தலைமையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதனை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.