சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம்!

சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு சீனியர் ஐபிஎஸ் அதிகாரி, பிரதீப் வி.பிலிப் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக பதவி வகித்தவர். நாளை, புதிய பதவிகளை இரு அதிகாரிகளும் ஏற்க உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு சிபிசிஐடி இயக்குனராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். இதுவரை தொடர்ந்து அதே பதவியில் அவர் தொடர்ந்து வந்தார்.

இந்த பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய பெரிய வழக்குகளை விசாரிக்க கூடிய அமைப்பாக சிபிசிஐடி செயல்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, குரூப்-1, குரூப்-2 தேர்வு முறைகேடு உள்ளிட்டவற்றை சிபிசிஐடிதான் விசாரித்து வருகிறது.

இவற்றையெல்லாம் விசாரித்து வந்ததில் முக்கிய பங்காற்றியவர் ஜாபர் சேட். இந்த நிலையில் இவரது பணியிடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட்.

முதல்வராக பதவி வகித்த கருணாநிதியிடம் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர்.

“எதுவாக இருந்தாலும் ஜாபர் சேட்கிட்ட சொல்லுப்பா..” என்று கருணாநிதியே கூறும் அளவுக்கு அவர் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.

ஆனால் பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்தபோது, செல்வாக்கு இல்லாத பதவியிடத்திற்கு மாற்றப்பட்டார்.

அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி, மகள் ஆகியோர் மீது கடந்த 2011-ல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜாபர்சேட், அவரது நண்பர்கள், மாமனார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஜாபர் சேட் தொடர்ந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ஜாபர் சேட்டை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.

இதன்பிறகு, அதிமுக ஆட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை பெற்றார். அதில் ஒன்றுதான், சிபிசிஐடி இயக்குநர் பதவியிடமாகும். 2

ஜி வழக்கு காலகட்டத்திலும், இவருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே