கொரோனா காரணமாக கிராம சபை கூட்டம் நடத்துவது சரியல்ல – உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்..!!

மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை நடத்தி வந்தது.

கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து வந்தது.

இதற்கிடையே கொரோனா தாக்கம் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரியும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, ” மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.

இந்த கொரோனா சூழலில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல. கொரோனா காரணமாகத்தான் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை” என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 2-ம் வாரத்துக்கு ஒத்தி வைத்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே