இதற்கு செய்யாமலேயே இருந்திருக்கலாமே.. பாஜகவினர் மீது மக்கள் அதிருப்தி..!!

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கடற்கரையை சுத்தப்படுத்திய பாஜகவினர் குப்பைகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மோடியின் பிறந்த நாளையொட்டி தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

குப்பைகளை அகற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் மோடியின் பிறந்த நாளை அடுத்த 20 நாட்களுக்கு கொண்டாட இருக்கிறோம்.

பிறந்தநாள் கொண்டாட்டமாக சேவைகளை செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பேசுகையில், பாஜகவினருடைய சமூகநீதி தலைவர் மோடி தான். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்று மாலை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், குப்பைகள் அகற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் நிகழ்ச்சி முடிந்தபின் குப்பை மூட்டைகளை கடற்கரையிலேயே விட்டுச் சென்றதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கு அவர்கள் செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுவதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே