21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது சவாலானது – கொரோனா அனுபவம் பகிர்ந்த ஜெனிலியா

கடந்த 21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் சவாலாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘மூன்று வாரங்களுக்கு முன்பு நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். எனக்கு கடந்த 21 நாள்களாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. கடவுளின் அருளால், தற்போது கொரோனா இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘கடந்த 21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் சவாலாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். மீண்டும் எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அன்பிடம் நீங்கள் சரணடைந்துவிடுங்கள். அதுதான் உண்மையான பலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘அதுதான் ஒவ்வொருவருடைய தேவை. விரைவில் சோதனை செய்யுங்கள், ஆரோக்கியமானதை உண்ணுங்கள். உடல்நலத்துடன் இருங்கள்.. இதுதான் அந்த அரக்கனிடம் சண்டையிடும் வழி’ என்றும் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே