தமிழக முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்..

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை புதன்கிழமை நடத்தி வருகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் வாலாஜா சாலை மார்க்கமாக தமிழக சட்டப்பேரவை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த பேரணியாகச் சென்ற இஸ்லாமிய அமைப்பினர்.

திருச்சியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி ஜமாத்துல் உலமா மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வெஸ்டரி பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட தயாராகினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து வாகனங்களில் சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசியக் கொடியை கையில் ஏந்தி சிஏஏ சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

கடந்த 2 நாள்களாக 1000த்திற்கும் மேற்பட்டோர் உழவர் சந்தை மைதானத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது பாதுகாப்பில் அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமுமுக, முஸ்லிம் லீக் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிசிஏ சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இஸ்லாமியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே