தோனியின் லெக் ஸ்டம்ப்பை பறக்க விட்ட 22 வயது ஆந்திர பவுலர்..

அதாவது பயிற்சியில் லெஜண்ட் அதிரடி மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் புகழ் தோனியை இன்கட்டரில் லெக் ஸ்டம்ப்பைப் பறக்க விட்டார் ஹரிசங்கர். ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடிகள் சென்று போய் விழுந்த புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

ஆந்திராவின் ஹரிசங்கர் ரெட்டி என்ற வேகப்பந்து வீச்சாளரின் கிரிக்கெட் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்ட நாள் என்றால் அது பிப்ரவரி 18ம் தேதி, ஆம்! அன்றுதான் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற எல்லோ ஆர்மிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அன்று ரெட்டிக்கு தெரிந்து விட்டது தோனி உள்ளிட்ட லெஜண்ட்களுடன் ஆடுவது தன் வாழ்க்கையை மாற்றி விடப்போகிறது என்று. ஆனால் யார் இவர்? இவரைப்போய் சிஎஸ்கே அணியில் எடுத்து விட்டதே, என்ன இப்படி செய்து விட்டார்கள்? என்று ஹரிசங்கர் ரெட்டியின் திறமையை சந்தேகிப்பவர்களுக்காகத்தான் இந்தச் செய்தி.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இழந்த புகழை மீட்டெடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தல தோனியின் கீழ் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அப்போது பயிற்சி  ஆட்டம் ஒன்றில் லெஜண்ட் அதிரடி மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் புகழ் தோனியை இன்கட்டரில் லெக் ஸ்டம்ப்பைப் பறக்க விட்டார் ஹரிசங்கர். ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடிகள் சென்று போய் விழுந்த புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

எப்படி தமீம் இக்பாலுக்கு டேல் ஸ்டெய்ன் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பை பல அடிகள் தள்ளிப் போய் விழச் செய்ததோ அதே போல் தோனியின் லெக் ஸ்டம்ப் பல அடிகள் தள்ளிப்போய் விழுந்தது. தோனியின் கால்களும் நகர்ந்ததற்கான அறிகுறிகளும் அந்தப் படத்தில் இல்லை என்பது வேறு விஷயம்.

இந்நிலையில் தோனி தலைமையில் இம்முறை ஆடும் சிறந்த வீரர்கள் இழந்த புகழை மீட்பார்கள் என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். கடந்த முறை சிஎஸ்கே அணியின் பிரச்சனை அயல்நாடு என்பதே. சென்னையில் நடைபெறும்போது 7 போட்டிகளில் 5-6 போட்டிகளை ஹோம் அட்வாண்டேஜில் வென்று விடுவார்கள், அதன் பிறகு ஒன்றிரண்டு போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவர்கள் ஆடும்போது அந்த ஹோம் அட்வாண்டேஜ் இல்லை. ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

காரணம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களிடம் ‘ஸ்பார்க்’ இல்லை என்று கூறி கேதார் ஜாதவ்வை ஆதரித்ததற்காக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உட்பட பலரும், நெட்டிசன்களும் தோனியை கடும் கிண்டலுக்கு ஆளாக்கினர். கடைசியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஸ்பார்க்கினால்தான் கொஞ்ச நஞ்ச வெற்றியையும் சென்னை அணி பெற முடிந்தது.

இந்நிலையில் அதிகம் அறிமுகம் இல்லாத ஹரிசங்கர் என்ற 22 வயது பவுலர் அனுபவசாலி ஆனால் வயதான தோனியின் லெக் ஸ்டம்பை பறக்க விடுகிறார் என்றால் ஐபிஎல் 2021-லும் தோனியின் பேட்டிங் குறித்த கவலைகளையே ரசிகர்களிடத்தில் தோற்றுவிக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே