சைலன்ட் ஆக இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி M01s விலை இவ்ளோதானா?

சாம்சங் நிறுவனம் சத்தம் போடாமல் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பான சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் மாடல் ஆகும்.
புதிய சாம்சங் கேலக்ஸி M01s மற்றும் முன்னதாக வெளியான கேலக்ஸி M01 ஆகிய இரண்டும் பல அம்சங்களில் ஒத்தவை; இருப்பினும் இந்த புதிய மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC க்கு பதிலாக மீடியா டெக் ஹீலியோ பி 22 SoC-ஐ பேக் செய்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராக்கள், 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்கள் மற்றும் சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் விலை:

சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.9,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இது லைட் ப்ளூ மற்றும் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களின் கீழ் வாங்க கிடைக்கும். இந்த இரண்டு வண்ண மாடல்களும் சாம்சங்கின் ஆஃப்லைன் சில்லறை கடைகள், சாம்சங்.காம் மற்றும் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும். இருப்பினும் விற்பனை பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை.
இதன் பெயர் குறிப்பிடுவதுபோல், சாம்சங் கேலக்ஸி M01s ஸ்மார்ட்போன் ஆனது கடந்தஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பாகும். இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

டூயல் சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி M01s ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஒன் UI கோர் கொண்டு இயங்குகிறது.

இது 6.2 இன்ச் அளவிலான எச்டி+ (720×1,280 பிக்சல்கள்) டிஎஃப்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது ‘இன்ஃபினிட்டி வி-கட்’ நாட்ச் வடிவமைப்பின்கீழ் செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 சோசி (எம்டி 6762) எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஆதரவினையும் வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்01 மாடலைப் போலவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் செங்குத்தான பின்புற கேமரா தொகுதியில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது.

இதன் டூயல்கேமராக்கள் லைவ் ஃபோகஸை ஆதரிப்பதாக சாம்சங் கூறுகிறது, இது பயனர்களை “கிரியேட்டிவ் ” புகைப்படங்களைப் பிடிக்க அனுமதிக்கிறது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை பொறுத்தவரை இதில் ஒரு 8 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் உள்ளது, இது சரவுண்ட் ஒலி அனுபவத்தை அளிக்கிறது. மேலும் இது முன்பே நிறுவப்பட்ட சாம்சங் ஹெல்த் பயன்பாட்டையும் கொண்டுள்ளது, இது பயனர்கள் தங்களது ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகிறது.
கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இதில் ப்ளூடூத், வைஃபை மற்றும் 4 ஜி எல்டிஇ ஆகியவைகள் உள்ளது. சுவாரசியமாக இதில் பேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது மற்றும் பயோமெட்ரிக் பாதுகாப்புக்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த மொத்த அமைப்பு ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே