சிங்கம் 3 வில்லனா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவு இருக்கும் புகைப்படங்கள் வைரல்.

சிங்கம் 3 வில்லனா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவு இருக்கும் புகைப்படங்கள் வைரல்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் தாகூர் அனூப் சிங். இவர் உடல் தோற்றம் தான் ரசிகரகளை அதிக அளவில் கவர்ந்தது. அதற்கு முன்பு அவர் பாடி பில்டராக இந்தியா சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளார். WBPF world bodybuilding championshipல் அவர் கோல்டு மெடல் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரதம் டிவி தொடரில் திருதராட்டிரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் தான் தாகூர் அனூப் சிங். அந்த தொடரில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதன் மூலமாக அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்தார்கள் என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது கொரானா முழு ஊரடங்கு காரணமாக எந்த வித ஷுட்டிங்கும் இல்லாத காரணத்தினால் ஓய்வில் தான் இருக்கிறார் தகூர் அனூப் சிங். இந்த லாக் டவுன் நேரத்தில் அவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் நீண்ட முடியுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர். அந்த அளவு நீண்ட முடியை வளர்ப்பதற்காக இவர் இரண்டு வருடங்களாக முடி வெட்டாமல் இருந்தாராம்.
இது பற்றி அவர் கூறியிருப்பதாவது..
ஆம்.. இது உண்மையான முடி தான். மகாபாரதத்திற்காக நான் இதை வளர்த்தேன். அந்த சீரியல் தொடங்கப்படுவதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அதனால் அது தொடங்கவே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது. அதனால் அந்த கால கட்டத்தில் நான் என்னுடைய முடி எவ்வளவு நீளமாக வளர்கிறதோ வளரட்டும் என விட்டிருந்தேன். கிடைத்த ரிசல்ட் இதுதான். அந்த தொடரினை (மறுஒளிபரப்பு )தற்போது ஸ்டார் பிளஸ் டிவியில் பாருங்கள். அது இந்த வாரம் முடிவடைய உள்ளது. மகாபாரதம் தொடர் கடைசி எபிசோடு வரும் கால கட்டத்தில் நான் நேரலையில் வருகிறேன்” எனக் கூறியுள்ளார் தாகூர்.
தாகூர் அனூப் சிங் சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்து இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொழிலதிபராக நடித்திருந்தார் அவர். அவரை சிங்கம் சூர்யா எப்படி பிடித்தார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும். அந்த படத்தில் அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இதற்கு முன்பு தாகூர் அனூப் சிங் அளித்த ஒரு பேட்டியில் உடலை இப்படி பிட்டாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி பேசி இருந்தார். ஒருவருடன் உடல் நலம் மற்றும் ஃபிட்னெஸ் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை பொறுத்து தான் இருக்கும், அதனால் அவர்கள் உணவு பழக்கம் மீது அதிக கவனம் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

தாகூர் அனூப் சிங் மிஸ்டர் ராவணா என்ற படத்தில் தான் அடுத்து நடிக்க உள்ளார். குந்தன் ராஜ் எழுதி இயக்கும் இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் உருவாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே