ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளம்பர் மறைவு..!!

பிரபல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளம்பர் காலமானார். அவருக்கு வயது 91. வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவர் டிசம்பர் 13, 1929ம் ஆண்டு கனடாவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1929ஆம் ஆண்டில் பிறந்தார். பின்னர் தனது இளம்வயதில் திரையுலகில் கவனம் செலுத்தினார்.

மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

The sound of Music, All The Money in the World, Beginners, The insider, The Exception, 12 Monkeys, Remember உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது நடிப்பின் திறனுக்காக டோனி விருது, அகாடமி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

அதன் உச்சமாக ஹாலிவுட் படத்தில் இவர் நடித்த படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் ப்ளம்பர் தனது 91 வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவரது மறைவு ஹாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே