ஆண்டிராய்ட் 11 இயங்குதளம் மற்றும் 44 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் கூடிய புதிய வி20 போனை விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

6.4 இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் திரை, புதிய ஆண்டிராய்ட் 11 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு வசதி, குவால்காம் ஸ்நாப்டிராகன் 720 ஜி பிராசசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, எஸ்டி கார்டு மூலமாக ஒரு டெரா பைட் வரை மெமரி நீட்டித்துக்கொள்ளும் வசதி, 64 மெகா பிக்சல் பிரதான கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது.

முன்புறத்தில் 44 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.

33 வாட்ஸ் பிளாஷ் சார்ஜருடன் 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ள இந்த போன் தான் ஆண்டிராய்ட் 11 இயங்குதளத்துடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் போன் என கூறப்படுகிறது. 

இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதன் விலை 24 ஆயிரத்து 990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே