நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அந்த படத்தின் விநியோக உரிமைக்காக, கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 17 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும்; ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டுக்குள் படத்தை வெளியிடாமல், தற்போது வேறு நிறுவனம் மூலம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கன்னி ராசி திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே